இந்தியாவில் தேயிலை உற்பத்தி சரிவு

ஜூன் மாதம் வரை 10 கோடி கிலோ அளவில் தேயிலை உற்பத்தி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தேயிலை உற்பத்தி சரிந்துள்ளதாக இந்திய தேயிலை கூட்டமைப்பு (ஐ.டி.ஏ) தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு பிறகான பொருளாதார மந்தநிலை, தேயிலை நுகர்வு குறைவு, மற்றும் உள்நாட்டு தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை 10 கோடி கிலோ அளவில் தேயிலை உற்பத்தி ஏற்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக நேபாளம் மற்றும் கென்யாவில் இருந்து 7 கோடி கிலோ அளவில் தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் தேயிலை உற்பத்தி பத்து சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story