அமெரிக்காவில் ரூ.4,500 கோடிக்கு ரஷிய எண்ணெய் இறக்குமதி


அமெரிக்காவில் ரூ.4,500 கோடிக்கு ரஷிய எண்ணெய் இறக்குமதி
x

அமெரிக்காவில் ரூ.4,500 கோடிக்கு ரஷிய எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடா்ந்துரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறி இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதித்தது.

இதனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தவிர்க்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றன.

இவை கச்சா எண்ணெயாக இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாக உள்ள நிலையில் ரஷியாவிடம் இருந்து கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் வாங்கியுள்ளதாக பின்லாந்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

1 More update

Next Story