12,000 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பு.. டி.சி.எஸ். சந்தை மதிப்பில் ரூ.28 ஆயிரம் கோடி இழப்பு


12,000 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பு.. டி.சி.எஸ். சந்தை மதிப்பில் ரூ.28 ஆயிரம் கோடி இழப்பு
x
தினத்தந்தி 30 July 2025 9:09 AM IST (Updated: 30 July 2025 9:10 AM IST)
t-max-icont-min-icon

பங்குச்சந்தையில் டி.சி.எஸ். பங்குகள் கடந்த 2 நாட்களாக கடுமையாக சரிந்து வருகின்றன.

புதுடெல்லி,

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்., இந்த ஆண்டு 2 சதவீத ஊழியர்களை, அதாவது 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, பங்குச்சந்தையில் டி.சி.எஸ். பங்குகள் கடந்த 2 நாட்களாக கடுமையாக சரிந்து வருகின்றன. நேற்று மும்பை பங்குச்சந்தையில், டி.சி.எஸ். பங்கு 0.73 சதவீதம் குறைந்து, ரூ.3,056 ஆனது. தேசிய பங்குச்சந்தையில் டி.சி.எஸ். பங்குகள் 0.72 சதவீதம் குறைந்து, ரூ.3,057 ஆக சரிந்தது. இதனால், கடந்த 2 நாட்களில் டி.சி.எஸ். சந்தை மதிப்பு ரூ.28 ஆயிரத்து 149 கோடி குறைந்துள்ளது.

1 More update

Next Story