யாரெல்லாம் தினமும் ஷாம்பு போட்டு குளிக்கலாம்..?

அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பது தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்யை அகற்றி முடி உதிர்தல், முடி வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
உச்சந்தலை முடியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு சீபம் எனப்படும் இயற்கை எண்ணெய் உற்பத்தி செய்யப்படும். அது அதிக அளவில் உற்பத்தியானால் தலைமுடி எண்ணெய் பசை தன்மையுடனும், தளர்வாகவும் காட்சியளிக்கும். எனவே சல்பேட் ரசாயனம் கலப்பில்லாத ஷாம்புவை தினசரி பயன்படுத்தி தலைமுடியை சுத்தம் செய்வது, எண்ணெய் பசை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். குறிப்பாக இயற்கையாகவே அதிக எண்ணெய் பசைத்தன்மை கூந்தல் கொண்டவர்கள் தினமும் ஷாம்பு போட்டு குளிப்பது இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுபவர்கள், மாசுபாடு நிலவும் பகுதியில் வசிப்பவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்துவது கூந்தலை சுத்தமாக பராமரிக்க உதவும்.
ஸ்டைலிஷாக காட்சியளிக்க விரும்புபவர்கள், தலைமுடிக்கு ஜெல், ஸ்பிரே உபயோகிப்பவர்கள் தினமும் ஷாம்பு உபயோகிப்பது தலைமுடி அழகுற ஜொலிக்க உதவிடும்.
பாதிப்புகள்
அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பது தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்யை அகற்றி முடி உதிர்தல், முடி வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதிலும் முடியில் எண்ணெய் பசைத்தன்மை குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்புகள் அதிகரிக்கும்.
சில ஷாம்புகளில் கடுமையான ரசாயனங்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ளன. அவை உச்சந்தலையை எரிச்சலடைய செய்யலாம்.






