விந்தணுக்களின் வீரியத்தை அதிகரிக்க செய்யும் உணவுகள்

ஆண் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் அழற்சி நோய்கள் விந்தணுக்களின் இயக்கத்தைக் குறைக்கிறது.
ஆண்களுக்கு விந்தணுக்களின் இயக்கம் வீரியமாக இல்லாவிட்டால் குழந்தை பிறப்பு தாமதம் ஆகும். விந்தணுக்களின் இயக்கக் குறைவு மருத்துவரீதியாக அஸ்தினோஸ்பெர்மியா எனப்படும்.
ஒரு பெண்ணின் கருமுட்டையை கருத்தரிக்க விந்தணு கருப்பை வழியாக பலோபியன் குழாயை அடைய வேண்டும். உயிரணு வேகமாக நீந்தி சினை பாதைக்குள் செல்வதற்கான சக்தியை தருவது உயிரணுவின் உடல் பகுதி தான், உயிரணு நீந்தி செல்ல பயன்படுவது அதன் வால் பகுதி. ஒருமுறை தாம்பத்தியம் கொள்ளும் போது பெண்ணுறுப்புக்குள் செல்லும் பல மில்லியன் உயிரணுக்கள் பயணித்து சினைப்பாதைக்குள் செல்ல சில மணி நேரங்கள் ஆகும். இதனால் ஆற்றல் மிக்க ஆயிரக்கணக்கான உயிரணுக்கள் மட்டுமே சினை பாதைக்குள் செல்லும். இவற்றில் பல விந்தணுக்கள் சினைப் பாதையிலே அழிந்து விடும். சில நூறு உயிரணுக்களே கருமுட்டைக்கு அருகில் நீந்தி செல்லும். இதில் ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியாக கருமுட்டையை துளைத்து கருவாக மாறுகிறது. ஆகவே உயிரணுக்கள் உள்ளே நீந்திச் செல்ல மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. இதனால் தான் கருத்தரித்தலில் விந்தணுக்களின் இயக்கத்தன்மை முக்கிய பங்காக உள்ளது.
விந்தணு இயக்க குறைவுக்கான காரணங்கள்
1) ஆண் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் அழற்சி நோய்கள் விந்தணுக்களின் இயக்கத்தைக் குறைக்கிறது.
2) வெரிகோசீல்: விதைப்பையிலுள்ள ரத்த நாளங்கள் விரிவடைந்து பெரிதாவதால் சிலருக்கு விந்தணுக்களின் இயக்க குறைபாடு ஏற்படுகிறது.
3) ஆன்டி ஸ்பெம் ஆன்டிபாடிஸ்: நோயெதிர்ப்பு எதிர் காரணிகள் விந்தணுக்கள் கர்ப்பப்பை வாய் சளிச்சவ்வை ஊடுருவிச் செல்லும் திறனைத் தடுக்கிறது.
4) குரோமோசோம்களில் காணப்படும் அசாதாரணங்கள்
5) புகைப்பிடித்தல், அதிகப்படியான குடிப்பழக்கம், விளையாட்டுகளின்போது ஏற்படும் சில காயங்கள், போதை மருந்துகளின் பயன்பாடுகள், சில ரசாயன பயன்பாடுகள், கதிரியக்க பாதிப்புகள் இவைகளும் விந்தணுக்கள் இயக்க குறைபாட்டிற்கு காரணிகளாக உள்ளது.
உணவுப் பழக்க வழக்கங்கள்
உடல் வெப்பத்தை தவிர்ப்பதற்கு தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். காரம், புளிப்பு சுவை உணவுகளை அளவுடன் எடுக்க வேண்டும்.
பூசணி விதைகள், பாதாம், வால்நட், பிஸ்தா, சியா விதைகள், விதையுடைய மாதுளம்பழம், முழுத் தானியங்கள், சாம்பார் வெங்காயம், பூண்டு, அவகேடோ, சாரப்பருப்பு, சூரை, சார்டின் மத்திச்சாழை, சிப்பி, இறால் போன்ற மீன்கள், அத்திப்பழம், புடலங்காய், பசலைக்கீரை, தூதுவளை கீரை, முருங்கைக் கீரை, தாளிக்கீரை போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவம்
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், நாகப் பற்பம் 100 மி.கி., பூரணச் சந்திரோதயம் 100 மி.கி., முத்துப் பற்பம் 100 மி.கி. இவற்றை இருவேளை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.
2) முருங்கைப்பூ லேகியம் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
3) சாலாமிசிறி லேகியம் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
