காலை உணவை தவிர்த்தால் அவ்வளவுதான்.. ஏகப்பட்ட உபாதைகள் வரும்


காலை உணவை தவிர்த்தால் அவ்வளவுதான்.. ஏகப்பட்ட உபாதைகள் வரும்
x

காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும்.

காலை உணவு என்பது அன்றைய நாளின் முதல் உணவு மட்டுமல்ல, முக்கியமான உணவும் கூட. நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் அந்த உணவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவும்.

காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். ஏனெனில் இன்சுலின் உணர்திறன், குளுக்கோஸ் செயல்திறனை பாதிக்கும். அதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும். இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்வதோடு உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பது உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படவும் காரணமாகிவிடும். காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது. அந்த உணவில் புரதம், நார்ச்சத்து நிறைய இடம் பெறுவது நல்லது. காலை உணவைத் தவிர்ப்பது நாள் முழுவதும் எரிச்சல் உணர்வை உண்டாக்கலாம். உடலில் செரோடோனின் அளவு குறைவது அதற்கு காரணமாக அமைந்திருக்கும்.

1 More update

Next Story