சுவாச அலர்ஜியை சரி செய்யும் சித்த மருந்துகள்


சுவாச அலர்ஜியை சரி செய்யும் சித்த மருந்துகள்
x
தினத்தந்தி 26 July 2025 6:00 AM IST (Updated: 26 July 2025 6:00 AM IST)
t-max-icont-min-icon

சிற்றரத்தைப் பொடியை தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து உண்ண நுரையீரல் வலுப்படும்.

பலருக்கும் சிரமம் தரும் நோயாக இருப்பது சுவாச அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய். உலக அளவில் சுமார் 18 முதல் 20 விழுக்காடு மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு செல்லும் பாதையானது வீக்கமடைந்து, அப்பகுதியில் உள்ள தசைகள் இறுகுகின்றன. இதனால் நுரையீரலுக்கு பிராணவாயு செல்வது குறைகிறது. சுவாச அலர்ஜி (ஒவ்வாமை) இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

அலர்ஜி தடுப்பு முறைகள்

நுரையீரலில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று இருந்தால், முதலில் தொற்றிற்கான மருந்தைக் கொடுத்து குணப்படுத்த வேண்டும். ஒவ்வாமையை உண்டுபண்ணுகின்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

வீடு, வேலை பார்க்கும் இடங்களைத் தூய்மையாய் வைத்திருப்பதோடு தூசி, புகை உள்ள இடங்களில் நடக்கும்போது மாஸ்க் (முகமூடி) அணிவது நல்லது.

சித்த மருத்துவத் தீர்வுகள்

* 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் அடிப்படையில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் கிராம்புக் குடிநீரை காலை, மாலை இருவேளை குடித்துவர ரத்தச் சுற்றோட்டம் நன்கு நடைபெற்று ஆக்சிஜன் அளவு அதிகரித்து புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். (கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள், சுக்கு இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சி ஓரளவு சூடு ஆறியதும் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து தயாரிக்கப்படுவது தான் கிராம்பு குடிநீர்)

* துளசி, கற்பூரவள்ளி, ஆடாதோடை இலைச் சாற்றைத் தேனில் காய்ச்சி 5 முதல் 10 மி.லி. வரை எடுத்துக் கொள்ளலாம்.

* நெல்லிக்காய் லேகியம் எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருமல், சளிப் பிரச்சினையும் நீங்கும்.

* நுரையீரலை வலுப்படுத்த தினமும் 10 துளசி இலைகளை சாப்பிடலாம்.

* தூதுவளை இலைகளை வைத்து ரசம் செய்து உணவுடன் உண்ண வேண்டும்.

* சிற்றரத்தைப் பொடியை தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து உண்ண நுரையீரல் வலுப்படும்.

* தாளிபத்திரி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி.,பலகரை பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.

* சுவாச குடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

* ஆடாதோடை நெய் ஐந்து மி.லி. வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.

1 More update

Next Story