சிறுநீரக கற்கள் கரைய எளிய சித்த மருத்துவம்


சிறுநீரக கற்கள் கரைய எளிய சித்த மருத்துவம்
x

கல்லுருக்கி இலை மற்றும் இரணகள்ளி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் வெளியேறும்.

சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களே சிறுநீரக கற்கள் என அழைக்கப்படுகின்றன. சிறுநீரக கற்கள் உருவானால் கடுமையான வேதனையை ஏற்படுத்தும். சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றவும், கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கும் சித்த மருத்துவத்தில் பல்வேறு தீர்வுகள் உள்ளன.

சித்த மருந்துகள்

1. சிறுகன்பீளை, நெருஞ்சில் விதை, மூக்கிரட்டை, போன்றவற்றின் இலைகளை பொடித்து வைத்துக் கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து, காலை, மாலை என இருவேளை குடிக்கலாம்.

2. மாவிலங்கப்பட்டை, தொட்டால் சிணுங்கி, வெட்டிவேர் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

3. கல்லுருக்கி இலை மற்றும் இரணகள்ளி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர கல் குணமாகும்.

4. சித்த மருத்துவ செய் மருந்துகளில், வெடியுப்புச் சுண்ணம்-50 மிகி, நண்டுக்கல் பற்பம்-200 மிகி, குங்கிலிய பற்பம்-200 மிகி இவற்றை நீர்முள்ளிக் குடிநீரில் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

5. அமிர்தாதி சூரணம் -1 கிராம் வீதம் காலை, மாலை இருவேளை சாப்பிட வேண்டும்.

உணவு பழக்கங்களும், வாழ்வியல் முறைகளும் சிறுநீர் கற்களால் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. ஆதலால் அன்றாட உணவு பழக்கவழக்கத்தின் வாயிலாகவும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் தடுப்பு முறைகள்:

* விட்டமின் 'ஏ' குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதாலும், சிறுநீரக கற்களை கரைப்பதாலும் பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

* கால்சியம், விட்டமின் 'டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். கால்சியம் அளவில் குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.

* இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ரூட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை சிறுநீரகக் கல் உள்ளவர்கள் உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

* நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளதால், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும். வெண்பூசணி, கோவைக்காய், முள்ளங்கிக்காய், சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்கவேண்டும்.

* உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை திரிபலா எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

1 More update

Next Story