சிறுநீரில் புரோட்டின் கசிவு... தொடர்ந்து அதிகரித்தால் கவனம் தேவை


சிறுநீரில் புரோட்டின் கசிவு...  தொடர்ந்து அதிகரித்தால் கவனம் தேவை
x

ஒரு நாளைக்கு 150 மில்லி கிராமுக்கு மிஞ்சிய புரத வெளியேற்றம் புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டிகள் சரியாக செயல்படாதபோது, ரத்தத்தில் உள்ள புரதம் சிறுநீரில் வெளியேற கூடும். இது மருத்துவ ரீதியாக 'அல்புமினூரியா' அல்லது 'புரோட்டீனுரியா' என்று அழைக்கப்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள ஜல்லடை போன்ற வடிகட்டிகள் ரத்தத்தில் உள்ள கழிவுகள், நச்சுகள் ஆகியவற்றை அகற்றி அதனை நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்றுகிறது.

நீரிழிவு நோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் செயலிழப்பு, கர்ப்ப காலம், பிளாஸ்மா செல் புற்று நோய், தீவிர உடற்பயிற்சி, சிறுநீர் பாதை தொற்று, மன அழுத்தம், புற்று நோய் (மார்பகம், குடல், வயிறு), மருந்துகளின் பக்க விளைவுகள் (லித்தியம், இன்டர்பெரான்), போதை மருந்து பழக்கம், வைரஸ் தொற்று (ஹெபடைடிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி), விஷ பூச்சி கடி, தன்னுடல் தாக்கு நோய் (லூபஸ்) போன்றவை 'புரோட்டீனுரியா' ஏற்பட முக்கிய காரணங்களாகும்.

ஒரு நாளைக்கு 150 மில்லி கிராமுக்கு மிஞ்சிய புரத வெளியேற்றம் புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு தீர்வாக, புரத உட்கொள்ளலை குறைக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு 5 கிராமிற்கும் குறைவான அளவு உப்பு மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள் தங்கள் எடையை குறைக்க வேண்டும்.

ஒரு நாளின் நிர்ணயிக்கப்பட்ட புரத வெளியேற்றத்தின் அளவான 150 மில்லி கிராமை விட சிறிய அளவே மிஞ்சிய புரோட்டினூரியாவிற்கு மருந்து தேவைப்படாது. அதிகமாக இருந்தால் மருந்து அவசியம். ஏ.சி.ஈ இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் ஆஞ்சியோடென்ஸின் ரிசெப்டர் பிளாக்கர் போன்ற மருந்துகள் புரோட்டினூரியாவை தடுக்க சிறுநீரக மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு டாபாகிளிபோசின், எம்பாகிளிபோசின் போன்ற எஸ்.ஜி.எல்.டி2 இன்ஹிபிட்டர்ஸ் புரோட்டினூரியாவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் புரோட்டினூரியாவை உதாசீனப்படுத்தினால் அது சிறுநீரகத்திற்கு மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். இது போல பக்க விளைவுகள் உண்டாகும் போது ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவு அதிகரித்து டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகூட தேவைப்படலாம்.

1 More update

Next Story