மூட்டுவலிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமா?


மூட்டுவலிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமா?
x

மூட்டு வலியில் அவதிப்படும் அனைவருக்கும் மூட்டு தேய்ந்து விட்டது என்று சொல்ல முடியாது.

முழங்கால் மூட்டுவலி என்பது யாருக்கும் எந்த வயதிலும் வரலாம். வயதானால்தான் வர வேண்டும் என்பதில்லை. ஆனால் திடீரென்று மூட்டு வலி வந்தால் மூட்டு தேய்மானத்தில்தான் வந்தது என்று முடிவு செய்து, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பது அவசியம் இல்லை மாறாக புதிய மருத்துவ தொழில் நுட்பமான ஜாயிண்ட் ப்ரெசெர்வேஷன் சர்ஜ்ரி (Joint preservation surgery) வாயிலாகவும் வலி நிவாரணம் பெறலாம். இதுபற்றி பி வெல் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் சிறப்பு மூத்த எலும்பு, மூட்டு மாற்று மருத்துவர் கோபிநாத் துரைசாமி கூறியதாவது:-

மூட்டு தேய்ந்தால் வலி வரும். அதற்காக வலியில் அவதிப்படும் அனைவருக்கும் மூட்டு தேய்ந்து விட்டது என்று சொல்ல முடியாது. மூட்டு வலிக்கு பல காரணங்கள் உள்ளன. உடல் பருமன், விபத்து, அடிபடுவது, அழற்சி மற்றும் நோய் தொற்றுகளாலும் மூட்டு வலி வரலாம்.

முழங்கால் மூட்டின் அடிப்படை கட்டமைப்பில் இரண்டு எலும்புகளின் இடையே மெனிஸ்கஸ் (Meniscus) எனப்படும் ஒரு ஜவ்வு உள்ளது, இது முட்டிகளை தேயாமல் பாதுகாக்கும் ஒரு ஜவ்வு ஆகும் வயதான காலத்தில் இந்த மெனிஸ்கஸ் (Meniscus) என்ற ஜவ்வு கிழிவதாலும், தேய்வதாலும், அல்லது கிழிந்து விலகுவதாலும் இரண்டு எலும்பு இடையே உராய்வு தன்மை அதிகரிப்பதால் வலி ஏற்படுகிறது. ஆகவே, ஜவ்வில் ஏற்பட்டுள்ள சிரத்தை சரி செய்தாலே உராய்வு தன்மை குறைந்து, வலி குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.

முந்தய கால கட்டத்தில் மூட்டு தேய்மானம் எந்த அளவு இருந்தாலும் அதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது.

ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆர்த்ரோஸ்கோபிக் எனப்படும் நுண் துளை அறுவை சிகிச்சை தொழில் நுட்ப மூலமாக ஜாயிண்ட் ப்ரெசெர்வேஷன் (Joint Preservation) எனப்படும் அறுவை சிகிச்சை செய்து மூட்டு வலிக்கான சரியான காரணத்தை கண்டு அறிந்து மூட்டு மாற்று சிகிச்சையை தவிர்க்கவோ அல்லது தள்ளிப் போடவோ அதிகமான வாய்ப்பு உள்ளது.

இந்த சிகிச்சையில் நுண் துளை வாயிலாக கேமராவை முட்டிக்குள் செலுத்தி முட்டியில் உள்ள பிரச்சினையை துல்லியமாக கண்டறிந்து அது ஜவ்விலோ அல்லது காட்ரிட்ஜ் என்ற படிவத்திலோ உள்ள பிரச்னையை சரி செய்தால் வலி சரி ஆகிவிடும்.

பொதுவாக நடுத்தர வயதானவர்களுக்கு முட்டிவலி வருவதற்கான காரணம் இந்த மெனிஸ்கஸ் எனப்படும் ஜவ்வு தனது வேர் பகுதியில் இருந்து கிழிந்து விலகுவதால், இரண்டு எலும்பும் ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்டு , அதனால் ஏற்படும் தேய்மானத்தால் வரும் வலி , இதற்கு அந்த ஜவ்வை நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தால் வலி முழுமையாக குணமடையும் இன்னும் சில நபர்களுக்கு ஜவ்வு கிழிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஜவ்வு ரணமாகி கூட இருக்கலாம், இதனால் வலி இருக்கலாம். அத்தகைய நபர்களுக்கு நுண் துளை வாயிலாக கேமரா செலுத்தி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை தற்பொழுதுள்ள புதிய தொழில் நுட்பமான ஸ்டெம் செல் எனப்படும் மருத்துவ சிகிச்சையின் மூலம் ஜவ்வில் ஏற்பட்டுள்ள ரணத்தை ஆற்றுவதற்கான தீர்வு வந்துள்ளது.

இந்த ஸ்டெம் செல் என்ற மருத்துவ முறையில் ஸ்டெம் செல் எனப்படும் அணுக்கள், நம் உடலில் உள்ள அணுக்களே, அவை நம் உடலில் உள்ள ரணத்தை தானாகவே ஆற்றி கொள்ளும் தன்மை கொண்டவை , அவற்றை சரியாக பயன்படுத்தி தேய்மானம், ரணம் உள்ள மூட்டிற்குள் செலுத்தும்போது ரணத்தை ஆற்றி வலியை குறைக்கும் தன்மை கொண்டவை ஆக இருக்கும்.

மூட்டு வலி வந்த அனைவருக்கும் மூட்டு தேய்மானம் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது, மூட்டு தேய்மானம் உள்ள அனைவருக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியம் கிடையாது என்றும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

ஆகையால், மூட்டு தேய்மானத்தை உரிய காலத்தில் கண்டறிந்து , தேய்மானத்தின் தீவிரத்தை குறைப்பதற்கான அற்புதமான சிகிச்சை முறையே ஜாயிண்ட் ப்ரெசெர்வேஷன் எனப்படும் சிகிச்சை முறை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை முறைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story