விந்து நீரை அதிகரிக்கும் உணவுகளும், சித்த மருந்துகளும்

ஒரு ஆண் பருவ வயதுக்கு வந்த நாள் தொடங்கி ஆயுளின் கடைசி வரைக்கும், தொடர்ந்து 24 மணி நேரமும் விந்து நீர் சுரப்பிகள் இயங்குகின்றன.
விந்து நீர் என்பது ஆணின் விதையில் உள்ள செம்னிபெரஸ் குழாய் சுரப்பி, சிறுநீர்ப்பைக்குப் பின்னால் அமைந்துள்ள செமினல் வெஸிக்கில்ஸ் சுரப்பி மற்றும் புராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் திரவங்களின் கலவை ஆகும். விந்து நீரின் அளவு என்பது 2 முதல் 5 மி.லி. இருக்கும். ஒரு முறை விந்து வெளியேறும்போது, ஒரு மில்லி லிட்டருக்கு குறைந்தது 15 முதல் 20 மில்லியன் விந்தணுக்களைக் கொண்டுள்ளது.
செமினிபெரஸ் சுரப்பி நீர்: இது தான் விதையில் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் முதன்மை தளமாகும். விதையின் எபிடிமிஸ் பகுதியில் சேமிக்கப்படும் இந்த விந்தணுக்கள் வாஸ் டிபெரென்ஸ் என்ற குழாய் மூலம் வெளியேறுகிறது.
புராஸ்டேட் சுரப்பி நீர்: விந்தணுக்களின் சரியான செயல்பாட்டிற்கும், கருவுறுதலுக்கும் புரோஸ்டேட் சுரப்பு நீர் முக்கியமானது. மெல்லிய பால் போன்ற திரவத்தில் புரோஸ்டேட் ஆன்டிஜென் (பி.எஸ்.ஏ) போன்ற நொதிகள் உள்ளன.
செமினல் வெஸிக்கில்ஸ் சுரப்பி நீர்: இது தான் விந்து நீரில் பெரும்பான்மையான பகுதியாகும். இந்த திரவத்தில் பிரக்டோஸ் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. மேலும் இந்த திரவத்தில் விந்தணு இயக்கம் மற்றும் நம்பகத்தன்மையை ஆதரிக்கும் புரோஸ்டாகிளாண்டின்கள் உள்ளது.
இந்த மூன்று சுரப்பிகளும் ஒரு ஆண் பருவ வயதுக்கு வந்த நாள் தொடங்கி ஆயுளின் கடைசி வரைக்கும், தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்குகின்றன. ஒரு நாளைக்கு பல மில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன.
சிலருக்கு தாம்பத்தியத்தின்போது விந்து நீர் மிகவும் குறைவாக வருவதால் தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாத நிலை இருக்கும். இதற்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகளை பார்ப்போம்.
விந்து நீரை அதிகரிக்கும் உணவுகள்
துத்தநாகம் நிறைந்த உணவுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கடல் உணவுகள், வால்நட்ஸ், பாதாம், பிஸ்தா, சாரப்பருப்பு, முருங்கை, ஆளிவிதைகள், ஆக்ஸிஜனேற்றி நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள், அஸ்பாரகஸ், பூண்டு, சின்ன வெங்காயம், புடலங்காய், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவை விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகள், இடுப்புத் தசைகளை வலுப்படுத்தும் கெகல் வகை உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சித்த மருத்துவ தீர்வுகள்
விந்து நீரை அதிகரிப்பதற்கு ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.
1) சாலாமிசிறி விதைச் சூரணம் 1 கிராம், பூரணச் சந்திரோதயம் 200 மி.கி, நாகப் பற்பம் 200 மி.கி அளவில் இருவேளை பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.
2) நெருஞ்சில் விதைச் சூரணம் 1 கிராம் வீதம் இருவேளை பாலில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
3) தாது கல்ப லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.