குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள்


குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள்
x

பெற்றோர்கள் குழந்தைகளின் காது வலிக்கு எண்ணெய் விடுவது போன்ற விஷயங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை இ.என்.டி என்று சொல்லப்படும் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் கல்வியில் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே, இந்த பிரச்சனையில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியதாக உள்ளது.

காதுகளில் அல்லது மூக்கில் ஏதேனும் சிறிய பொருட்களை குழந்தைகள் போட்டுக் கொள்ளும்போது அதன் மூலம் அடைப்பு ஏற்பட்டு சில நேரங்களில் ரத்தம் கூட வழியலாம். பழங்களின் கொட்டைகள், சிறிய நாணயங்கள் ஆகியவற்றை எதிர்பாராமல் குழந்தைகள் விழுங்கி விடும்பொழுது அது உணவுக் குழாய் அல்லது மூச்சுக்குழாய் வரை சென்று அடைபட்டு சிக்கலை ஏற்படுத்தி விடலாம். அது போன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது மிக அவசியம்.

குழந்தைகளின் காதுகளை பொறுத்தவரை வலி ஏற்படுவது அவ்வப்பொழுது வரக்கூடிய பாதிப்புதான். சளி தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது காது வலி அவர்களுக்கு ஏற்படலாம். மூக்கின் பின்பக்கம் உள்ள குழாய் மூலம் காதுக்கு செல்லும் வழி அடைபட்டு தொற்று ஏற்பட்டு அதன் மூலம் காது வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், சளி பிடித்துள்ள சமயங்களில் குழந்தைகள் காது வலி என்று தெரிவித்தால் அவர்களுடைய காதில் உட்புறம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், பட்டாசுகளை அதிக ஒலியோடு வெடிப்பது, காது சுத்தம் செய்யும் பட்ஸை குழந்தைகள் தவறாக பயன்படுத்தி விடுவது, குழந்தைகளுக்கு இடையில் ஏற்படும் சண்டையின்போது காது பகுதியில் எதிர்பாராமல் தாக்கி விடுவது, ஏதேனும் கட்டிகள் ஏற்படுவது ஆகியவை காரணமாகவும் குழந்தைகளின் காதுகளில் வலி ஏற்படலாம். பெற்றோர்கள் தவறியும்கூட குழந்தைகளின் காது வலிக்கு எண்ணெய் விடுவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது.

மூக்கில் ஏற்படும் சிக்கல்களை பொறுத்தவரை சுற்றுப்புற சூழலில் உள்ள மாசு காரணமாகத்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் சளி பிடிக்கும்பொழுது மூக்கு அடைத்து விடுவதால் வாய் மூலம் சுவாசம் நடந்து அடினாய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது,

தொண்டையை பொருத்தவரை டான்சில் கட்டிகள் ஏற்படுவது, அதன் மூலம் இன்பெக்சன் ஏற்பட்டு காய்ச்சல் வருவது, குளிர் பானங்களை அல்லது ஐஸ்கிரீமை அதிகமாக உண்பது, கரும்புச்சாறு குடிப்பது, பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாக பழகுவது, தொடர் இருமல் ஆகியவை காரணமாக பாதிப்பு ஏற்படலாம்.

1 More update

Next Story