மூலனூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், மூலனூர் கொங்கு நகரில் மகா மாரியம்மன், சித்தி விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. யாகசாலை பூஜைகளுக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்று, பின்னர் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து சித்தி விநாயகர், மகா மாரியம்மன், கருப்பணசாமி ஆகிய மூலவர் மற்றும் பரிவார ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனையும், மகா தரிசனமும் நடத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோவில் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.






