தை மாதத்தின் முதல் முகூர்த்தம்; திருச்செந்தூரில் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்


தை மாதத்தின் முதல் முகூர்த்தம்; திருச்செந்தூரில் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்
x

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று திருக்கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் என்பதாலும், ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் இன்றைய தினம் தை மாதத்தின் முதல் முகூர்த்த தினம் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், மணமக்கள் கோவில் முன்பகுதியிலும், பிரகாரங்களிலும் ஆங்காங்கே நின்றவாறு திருமணம் செய்து கொண்டனர்.

மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள், நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் உள்பட ஏராளமானோர் வருகை தந்ததால் திருச்செந்தூர் கோவில் வளாகம் மட்டுமின்றி, சன்னதி தெரு, ரத வீதி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story