செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் 1008 விளக்கு பூஜை

விளக்கு பூஜையை முன்னிட்டு உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
செஞ்சி கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர் ஆலயத்தில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் விளக்கு பூஜை தொடங்கியது. ஸ்ரீ ரங்க பூபதி கல்வி நிறுவனத்தின் தாளாளர் வழக்கறிஞர் ரங்க பூபதி இயக்குனர் சாந்தி பூபதி ஆகியோர் கலந்து கொண்டு பூஜையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு மந்திரங்கள் முழங்க 1008 பெண்கள் விளக்கேற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வைகை தமிழ்ச்செல்வன், ஜெயந்தி, பாண்டுரங்கா கல்வி நிறுவன செயலாளர் கார்த்திக், சந்தியா, ரங்க பூபதி நர்சரி பள்ளி இயக்குனர் சரண்யா ஶ்ரீபதி வழக்கறிஞர் ஆத்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






