சூர்யா சேதுபதியின் "பீனிக்ஸ்" படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?

அனல் அரசு இயக்கிய பீனிக்ஸ் படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பீனிக்ஸ்'. இந்த படத்தின் மூலம் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.இதில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்திருந்தனர். ஆக்சன் கதைக் களத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பீனிக்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பீனிக்ஸ் படம் டெண்ட்கொட்ட ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story