“தி பேமிலி மேன் 3” வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘தி பேமிலி மேன் 3’ வெப் தொடர் நவம்பர் 21ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர், ‘தி பேமிலி மேன்’. ராஜ் மற்றும் டீகே இயக்கிய இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாவது சீசன் 2021-ம் ஆண்டு வெளியானது. அதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் சமந்தாவும் நடித்திருந்தார். இதுவும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரின் 3ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் மற்றும் டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்.
‘தி பேமிலி மேன் 3’ வெப் தொடர் நவம்பர் 21ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






