நொடிக்கு நொடி சஸ்பென்ஸ்...டிரெண்டிங்கில் சூப்பர்நேச்சுரல் திகில் படம் - எதில் பார்க்கலாம்?

பள்ளிக் குழந்தைகள், ஒரு மந்திரவாதி, தீய சக்திகள்... இதுதான் இப்படத்தின் முக்கியக் கதை.
சென்னை,
2023 ஆம் ஆண்டு குஜராத்தியில் 'வாஷ்' என்ற திரைப்படம் வெளியானது. அஜய் தேவ்கன் இதை இந்தியில் 'சைத்தான்' என்ற தலைப்பில் ரீமேக் செய்து வெற்றி பெற்றார். இதன் மூலம், 'வாஷ்' பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.
இப்போது அதன் தொடர்ச்சியாக 'வாஷ் லெவல் 2' என்ற படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் இப்போது நெட்பிளிக்ஸில் டிரெண்டிங்கில் உள்ளது. குஜராத்தி மற்றும் இந்தியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
பள்ளிக் குழந்தைகள், ஒரு மந்திரவாதி, தீய சக்திகள்... இதுதான் 'வாஷ் 2' படத்தின் முக்கியக் கதை. நொடிக்கு நொடி சஸ்பென்ஸ்... உங்களுக்கு திகில் படங்கள் பிடிக்கும் என்றால் இந்தப் படத்தை பாருங்கள். இருப்பினும், தமிழ் பதிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story






