ஓடிடியில் ''ஜோ'' பட நடிகையின் தெலுங்கு அறிமுக படம்...எங்கே, எப்போது பார்க்கலாம்?


Suhas’ Oh Bhama Ayyo Rama Streaming on ETV Win
x
தினத்தந்தி 2 Aug 2025 7:19 AM IST (Updated: 2 Aug 2025 7:19 AM IST)
t-max-icont-min-icon

''ஜோ'' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட மாளவிகா மனோஜ், தற்போது தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார்.

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ''ஜோ'' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட மாளவிகா மனோஜ், தற்போது தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்ற சுஹாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் இப்படத்தின் மீது சில எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. இந்நிலையில், இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இடிவி வின் தளத்தில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்த இப்படம் ஓடிடியில் வரவேற்பை பெற முடியுமா என்பதை பார்போம்.

இந்த படத்தில் அனிதா ஹசனாந்தனி, அலி, ரவீந்தர் விஜய், பப்லூ பிரிதிவீரஜ், பிரபாஸ் ஸ்ரீனு மற்றும் ரகு கருமஞ்சி உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1 More update

Next Story