ஓடிடியில் வெளியாகும் சஞ்சய் தத்-மவுனி ராயின் 'தி பூத்னி' - எப்போது, எதில் பார்க்கலாம்?

ஹாரர்-காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை.
சென்னை,
சஞ்சய் தத்தின் நடிப்பில் வெளியான 'தி பூத்னி' திரைப்படம் திரையரங்குகளில் அதிகம் கவனத்தை ஈர்க்கவில்லை. சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், வருகிற 18 அன்று இரவு 8 மணி முதல் ஜீ5 மற்றும் ஜீ சினிமா ஆகிய ஓடிடி தளங்களில் இந்த படம் வெளியாக உள்ளது.
ஹாரர்-காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை. தற்போது ஓடிடியில் எப்படி செயல்படப்போகிறது என்பதைப் பார்ப்போம்.
Related Tags :
Next Story