ரஜினியின் “கூலி” பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு


ரஜினியின் “கூலி” பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் வரும் 11ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்த இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. மூன்று நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, வேகமாக கடந்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக, இந்த சாதனையை விஜய்யின் 'லியோ' வைத்திருந்தது. இது ஐந்து நாட்களில் அதை எட்டியது. இதன் மூலம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.

‘கூலி’ படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.500 கோடி மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.500 கோடி கிளப்பில் நுழைந்த நான்காவது தமிழ் படமாகவும், ரஜினிகாந்தின் மூன்றாவது படமாகவும் ‘கூலி’ அமைகிறது.

இந்நிலையில் ‘கூலி’திரைப்படம் வரும் 11ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

1 More update

Next Story