ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் புதிய படம்

நடிகர் பிருத்விராஜ் கயோஸ் ரானி இயக்கத்தில் சர்ஜமீன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவரது நடிப்பில் சமீபத்தில் எல் 2 எம்புராம் படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
அதனை தொடர்ந்து நடிகர் பிருத்விராஜ் கயோஸ் ரானி இயக்கத்தில் சர்ஜமீன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கஜோல் மற்றும் இப்ராஹிம் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் குடும்பம், காதல் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது.
இந்த நிலையில், பிருத்விராஜ் நடித்துள் சர்ஜமீன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டாரில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.