ஓடிடி-ல் வெளியாகும் 'பெருசு'...எப்போது தெரியுமா?


ஓடிடி-ல் வெளியாகும் பெருசு...எப்போது தெரியுமா?
x
தினத்தந்தி 5 April 2025 6:50 AM IST (Updated: 5 April 2025 6:52 AM IST)
t-max-icont-min-icon

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'பெருசு' படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்சு நிறுவனத்தின் மூலம் தயாரித்த படம் 'பெருசு'. இந்த படத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நடிகை நிஹாரிகா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருந்த இப்படத்தை இளங்கோ ராமநாதன் இயக்கி இருந்தார்.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 11-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

1 More update

Next Story