தமன்னாவின் ''டூ யூ வான்னா பார்ட்னர்'' வெப் தொடர் - எங்கு, எப்போது, பார்க்கலாம்?

இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகைகள் தமன்னா பாட்டியா மற்றும் டயானா பென்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ''டூ யூ வான்னா பார்ட்னர்'' வெப் தொடரின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, செப்டம்பர் 12 அன்று ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளது.
கோலின் டி’குன்ஹா இயக்கியுள்ள இந்தத் தொடரை கரண் ஜோஹர், அதர் பூனவல்லா மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜாவேத் ஜாப்ரி, நகுல் மேத்தா, நீரஜ் கபி, ஸ்வேதா திவாரி, சூபி மோதிவாலா மற்றும் ரன்விஜய் சிங்ஹா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Related Tags :
Next Story