'கலியுகம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'கலியுகம்' படம் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவான படம் 'கலியுகம்'. இப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இதில் முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். வித்தியசமான கதையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 11-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story