இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 31.03.25 முதல் 06.04.25 வரை

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓடிடி தளங்கள் |
மர்மர் | டெண்ட்கொட்டா |
லெக் பீஸ் | டெண்ட்கொட்டா |
டெஸ்ட் | நெட்பிளிக்ஸ் |
கிங்ஸ்டன் | ஜீ5 |
ஜென்டில்வுமன் | டெண்ட்கொட்டா |
அதர்மக் கதைகள் | டெண்ட்கொட்டா |
'மர்மர்'
ஹேமந்த் நாராயணன் 'மர்மர்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த மாதம் 7ம் தேதி வெளியான இப்படம் கலைவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படம் இன்று முதல் டெண்ட்கொட்டா தளத்தில் வெளியாகிறது.
'லெக் பீஸ்'
ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் கடந்த மாதம் 7ம் தேதி வெளியான படம் 'லெக் பீஸ்'. இதில் வி டி வி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக். மைம் கோபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலைவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது டெண்ட்கொட்டா தளத்தில் வெளியாகி இருக்கிறது.
'அதர்மக் கதைகள் '
இயக்குனர் காமராஜ் வேல் இயக்கத்தில் வெற்றி சுட்லே, சாக்சி அகர்வால், திவ்யா துரையசாமி, அம்மு அபிராமி என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் அதர்மக் கதைகள். தற்போது இப்படம் டெண்ட்கொட்டா தளத்தில் வெளியாகி இருக்கிறது.
'கிங்ஸ்டன்'
இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள படம் கிங்ஸ்டன். இதில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். கடந்த மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
'ஜென்டில்வுமன்'
அறிமுக இயக்குனர் ஜோசுவா சேதுராமன் இயக்கிய படம் 'ஜென்டில்வுமன்'. ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் கடந்த மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் டெண்ட்கொட்டா ஓ.டி.டியில் வெளியாகியுள்ளது.
'டெஸ்ட்'
மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து சஷிகாந்த் இயக்கிய 'டெஸ்ட்' படத்தில் நடித்துள்ளனர். இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.