இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 12.05.25 முதல் 18.05.25 வரை


இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 12.05.25 முதல் 18.05.25 வரை
x

இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள் ஓ.டி.டி தளங்கள்

ஸ்நோ ஒயிட்

அமேசான் பிரைம்

லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி வார் ஆப் தி ரோஹிரிம்

ஜியோ ஹாட்ஸ்டார்

கேங்கர்ஸ்

அமேசான் பிரைம்

மரணமாஸ்

சோனி லிவ்

தி டோர்

சிம்பிலி சவுத்

க.மு-க.பி

சிம்பிலி சவுத்

வுல்ப் மேன்

ஜியோ ஹாட்ஸ்டார்

"ஸ்நோ ஒயிட்"

மார்க் வெப் இயக்கியுள்ள இந்த படத்தில், கேல் கடோட் தீய ராணியாக நடித்துள்ள அனிமேஷன் படம் 'ஸ்நோ ஒயிட்'. 1937-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படமானஸ்னோ ஒயிட் அண்ட் தி செவன் ட்வார்ப்ஸின் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கடத்ந 13-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

"லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி வார் ஆப் தி ரோஹிரிம்"

'லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி வார் ஆப் தி ரோஹிரிம்' என்பது அனிமேஷன் கற்பனை கதையாகும். இயக்குனர் கென்ஜி கமியாமா ஜப்பானிய அனிமேஷன் பாணியில் இந்த அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அமேசான் பிரைமின் 'தி ரிங்ஸ் ஆப் பவர்' படத்தை தழுவி வேறொரு புதிய தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி ஜியோ ஹார்ட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

"கேங்கர்ஸ்"

வடிவேலு மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கேங்கர்ஸ்'. இதில் கேர்த்ரின் தெரசா, வாணி போஜன், ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று (15-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

"மரணமாஸ்"

பாசில் ஜோசப் நடிப்பில் வெளியான படம் 'மரணமாஸ்'. இப்படத்தில் ஒரு வித்தியாசமான பன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சிவபிரசாத் இயக்கியுள்ளார். இப்படம் இன்று சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

"தி டோர்"

ஜெய் தேவ் இயக்கத்தில் ஜூன் டிரீம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியான படம் 'தி டோர்'. இதில் நடிகை பாவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை (16-ந் தேதி) சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

"க.மு-க.பி"

புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் விக்னேஷ் ரவி மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் க.மு-க.பி. காதல் வாழ்வு, கல்யாண வாழ்வு என்ற வாழ்வின் இரு பரிணாமங்களை பற்றி பேசும் இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

"வுல்ப் மேன்"

லீ வன்னெல் இயக்கத்தில் வெளியான படம் "வுல்ப் மேன்". இதில் கிறிஸ்டோபர் அபோட் , ஜூலியா கார்னர் மற்றும் சாம் ஜேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story