இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் - (09.06.25 முதல் 15.06.25 வரை)

இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓ.டி.டி தளங்கள் |
படக்களம் | ஜியோ ஹாட்ஸ்டார் |
கேசரி சாப்டர் 2 | ஜியோ ஹாட்ஸ்டார் |
லெவன் | ஆஹா, பிரைம் |
டிடி நெக்ஸ்ட் லெவன் | ஜீ5 |
சுபம் | ஜியோ ஹாட்ஸ்டார் |
ஆலப்புழா | ஜிம்கானா சோனி லைவ் |
தி அமெச்சூர் | பிரைம் |
பைட் ரிஸ்க் | பிரைம் |
சூப்பர் கேர்ள்ஸ் | மனோரமா மேக்ஸ் |
டீப் கவர் | பிரைம் |
தி ரூக்கி | நெட்பிளிக்ஸ் |
அண்டர்டாக்ஸ் | ஜியோ ஹாட்ஸ்டார் |
டைட்டன் தி ஓஷன் கேட் | டிசாஸ்டர் நெட்பிக்ஸ் |
"படக்களம்"
மனு ஸ்வராஜ் இயக்கத்தில் சூரஜ் வெஞ்சமூடு, ஷரப் யு தீன் , சந்தீப் பிரதீப் விஜய் பாபு ஆகியோர் நடித்துள்ள படம் 'படக்களம்'. கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
"கேசரி சாப்டர் 2"
கரன் சிங் தியாகி இயக்கத்தில் அக்ஷய் குமார் , மாதவன் , அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேசரி சேப்டர் 2. இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
"லெவன்"
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் லெவன். விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரியா ஹரி , ஷசாங் , ரவி வர்மா , கீர்த்தி தாம ராஜூ , அபிராமி , திலீபன் , ரித்விகா ஆகியோ நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜூன் 13 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
"டிடி நெக்ஸ்ட் லெவல்"
எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ் லெவல். இதில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய நடித்துள்ளனர் . இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ பைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
"சுபம்"
சமந்தா தயாரிப்பில் உருவான முதல் படம் சுபம் . இதில் ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷ்ரியா கொந்தம், சரண் பெரி, ஷ்ரவணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் ஜூன் 13 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது.
"ஆலப்புழா ஜிம்கானா"
கலிட் ரஹ்மான் இயக்கத்தில்வெளியான படம் ஆலப்புழா ஜிம்கானா. இதில் நஸ்லென் லுக்மன் அவரன் , கனபதி , அனகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.