இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 05.05.25 முதல் 11.05.25 வரை

இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓ.டி.டி தளங்கள் |
வருணன் | ஆஹா தமிழ் |
ஒடேலா 2 | அமேசான் பிரைம் |
குட் பேட் அக்லி | நெட்பிளிக்ஸ் |
அக்கட அம்மாயி இக்கட அப்பாயி | ஈ டிவி வின் |
ஜாக் | நெட்பிளிக்ஸ் |
அஸ்திரம் | ஆஹா தமிழ் |
கிங்ஸ்டன் | சிம்பிலி சவுத் |
ல்தகா சைஆ | டென்ட்கொட்டா |
ராபின்ஹுட் | ஜீ5 |
'வருணன்'
கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 7-ந் தேதி (நேற்று) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'ஒடேலா 2'
அசோக் தேஜா தான் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான படம் 'ஒடேலா 2'. இதில் ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நாம் இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் இன்று (8-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
'குட் பேட் அக்லி'
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இதில் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையில் உருவான இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாகிறது.
'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி'
நிதின், பரத் இயக்கத்தில் வெளியான படம் 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி'. இதில் ரதீப் மச்சிராஜு, தீபிகா பில்லி, வெண்ணெலா கிஷோர் மற்றும் சத்யா ஆகியோர் நடித்து உள்ளனர். கிராமத்து காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று ஈ.டி.வி வின் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
'ஜாக்'
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் வைஷ்ணவி சைதன்யா நடித்துள்ள படம் 'ஜாக்'. பொம்மரில்லு பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாகிறது.
'அஸ்திரம்'
கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம் 'அஸ்திரம்'. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். இதில் நீரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
'கிங்ஸ்டன்'
ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள படம் கிங்ஸ்டன். கமல் பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
'ல்தகா சைஆ'
சதா நடார் இயக்கத்தில் வெளியான படம் 'ல்தகா சைஆ'. இதில் மோனிகா சலினா கதாநாயகியாக நடித்துள்ளார். கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடப்பதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலை மையமாக கொண்ட சஸ்பென்ஸ் திரில்லரில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'ராபின்ஹுட்'
ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. நிதின் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கினார். இதில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.