ஓடிடியில் வெளியாகும் 'பெருசு' பட நடிகையின் புதிய படம்

நடிகை நிஹாரிகா வரவேற்பை பெற்ற 'பெருசு' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சென்னை,
சமூக வலைதள பரபலம் நிஹாரிகா. இவர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பெருசு' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதற்கிடையில், இவர் சமீபத்தில் ''மித்ரா மண்டலி'' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமானார்.
அறிமுக இயக்குனர் விஜயேந்தர் எஸ் இயக்கிய இந்த படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 7-ம் தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் தோல்வியை சந்தித்த இப்படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Related Tags :
Next Story






