ஓடிடியில் வெளியாகும் ஸ்ரீலீலாவின் ‘மாஸ் ஜதாரா’...எதில், எப்போது பார்க்கலாம்?


Mass Jathara: Netflix announces premiere date
x

கடந்த மாதம் 31-ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சென்னை,

ரவி தேஜா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஆக்சன் படம் மாஸ் ஜதாரா. கடந்த மாதம் 31-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பானு போகவரபு இப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்நிலையில், இப்படம் திரையரங்குகளை விட்டு ஓடிடிக்கு வரவுள்ளது. அதன்படி, இப்படம் நெட்பிளிக்ஸில் வருகிற 28-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்டிரீமிங் ஆக இருக்கிறது.

இப்படத்தில் ராஜேந்திர பிரசாத், நிதிஷ் நிர்மல், கிருஷ்ண குமார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர், பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்திருக்கிறார்.

1 More update

Next Story