ஓடிடியில் வெளியாகும் யோகி பாபுவின் 'லெக் பீஸ்'


Leg Piece streaming from this week on Tentkotta
x

காமெடி கதைக்களத்தில் உருவான இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லெக் பீஸ்'. இதில் வி டி வி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக். மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாசாணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜோர்ன் சுர ராவ் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. மணிகண்டன் தயாரித்திருக்கிறார். கடந்த 7-ம் தேதி வெளியான இப்படம் கலைவையான விமர்சனங்களை பெற்றது.

காமெடி கதைக்களத்தில் உருவான இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, டெண்ட்கொட்டா தளத்தில் இப்படம் இந்த வாரம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story