"குபேரா" முதல் "டிஎன்ஏ" வரை.. இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியான படங்கள்!

இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகி உள்ளன என்பதை காண்போம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓடிடி தளங்கள் |
குபேரா | அமேசான் பிரைம் |
மனிதர்கள் | ஜீ5 |
பைரவம் | ஜீ5 |
சட்டமும் நீதியும் | ஜீ5 |
படை தலைவன் | டெண்ட்கொட்டா |
டிஎன்ஏ | ஜியோ ஹாட்ஸ்டார் |
"குபேரா"
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் குபேரா. இதில் ரஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்பம் நேற்று (18ந் தேதி) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"மனிதர்கள்"
அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மனிதர்கள்'. இந்த படத்தை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. பெண்களே இல்லாத இந்த திரில்லர் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி உள்ளது.
"பைரவம்"
சூரி நடித்த கருடன் படத்தை தெலுங்கு மொழியில் பைரவம் என்ற தலைப்பில் ரீமேக் செய்து இருந்தனர். இப்படத்தை விஜய் கனகமெடலா இயக்கியுள்ளார். சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா , ரோகித், அதிதி ஷங்கர், திவ்யா பிள்ளை மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"சட்டமும் நீதியும்"
சரவணன், நம்ரிதா, அருள் மற்றும் ஷன்முகம் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் சட்டமும் நீதியும். இது ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி இருக்கிறது. இந்த வெப் தொடர் நேற்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"படை தலைவன்"
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படம் படை தலைவன். அன்பு இயக்கியுள்ள 'படை தலைவன்' படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இப்படம் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் டெண்ட்கொட்டா ஓடிடியில் நேற்று வெளியாகி உள்ளது.
"டிஎன்ஏ"
இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா நடிப்பில் வெளியான படம் "டிஎன்ஏ". இதில் நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் இன்று (19ந் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.