ஓ.டி.டி ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெளியாகும் படங்கள் (21.07.25 முதல் 27.07.25 வரை)


ஓ.டி.டி ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெளியாகும் படங்கள் (21.07.25 முதல் 27.07.25 வரை)
x

இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகி உள்ளன என்பதை காண்போம்.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள்ஓடிடி தளங்கள்
ரோந்துஜியோ ஹாட்ஸ்டார்
மார்கன்அமேசான் பிரைம், டென்ட்கொட்டா

ஷோ டைம்

சன் நெக்ஸ்ட்

ராஜபுத்திரன்

ஆஹா தமிழ்
படை தலைவன்

ஆஹா தமிழ்

சர்ஜமீன்

ஜியோ ஹாட்ஸ்டார்

கண்ணப்பா

அமேசான் பிரைம்

"ரோந்த்"

இயக்குநர் சாஹி கபீர் இயக்கத்தில் திலீஷ் போத்தான், ரோஷன் மாத்யூ நடிப்பில் உருவான படம் ரோந்த். இரவில் ரோந்து பணிக்குச் செல்லும் காவலர்கள் எனென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை பற்றி பேசும்படி இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 22ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"மார்கன்"

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் மார்கன். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா என பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை (25ந் தேதி) அமேசான் பிரைம் மற்றும் டென்ட்கொட்டா ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.

"ஷோ டைம்"

லெவன் பட நடிகர் நவீன் சந்திரா நடித்துள்ள படம் ''ஷோ டைம்''. மதன் தட்சிணாமூர்த்தி இயக்கிய ''ஷோ டைம்'' தமிழ் திரைப்படமான நூடுல்ஸின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

"ராஜபுத்திரன்"

பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள படம் ராஜபுத்திரன். கிராமத்து கதைக்களத்தில் உருவான இந்த படத்தினை மகா கந்தன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

"படை தலைவன்"

நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படம் படை தலைவன். அன்பு இயக்கியுள்ள 'படை தலைவன்' படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

"சர்ஜமீன்"

கயோஸ் ரானி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள படம் சர்ஜமீன் . இந்த படத்தில் கஜோல் மற்றும் இப்ராஹிம் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் குடும்பம், காதல் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

"கண்ணப்பா"

கண்ணப்பா படம் வரலாற்று புதினத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story