ஒவ்வொரு நொடியும் பயங்கரம்...ஓடிடியில் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த ஹாரர் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?


Actress kajol horror movie now trending in netflix ott
x

இந்தப் படம் சுமார் 133 நிமிடங்கள் உங்களை இமைக்க விடாது.

சென்னை,

இந்த வருடம் வெளிவந்த ஒரு திகில் படம் இப்போது ஓடிடியில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படம் சுமார் 133 நிமிடங்கள் உங்களை இமைக்க விடாது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலிர்க்க வைக்கிறது. நாம் பேசும் படத்தின் பெயர் ''மா''.

பாலிவுட் நட்சத்திர நடிகை கஜோலின் திகில் படமான 'மா' இப்போது ஓடிடி தளத்திற்கு வந்துள்ளது. அதில், அவர் அம்பிகா வேடத்தில் நடித்திருக்கிறார். விஷால் புரியா இயக்கியுள்ள இப்படத்தில், ரோனித் ராய், கோபால் சிங் மற்றும் இந்திரனில் சென்குப்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில், அம்பிகா தனது கணவர் இறந்த பிறகு தனது மகளுடன் வசிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களது மூதாதையர் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். பல ஆண்டுகளாக, இளம் பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போவது அல்லது கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் அங்கு நடந்து வருகின்றன.

இந்த சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு தீய சக்தி இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். தனது மகளையும் கிராம மக்களையும் காப்பாற்ற தீய சக்தியுடன் கடுமையாக போராடுகிறார் அம்பிகா. இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

1 More update

Next Story