ஈஷா ரெப்பா, ராஷி சிங் நடித்த "3 ரோஸஸ்" சீசன் 2 - டீசர் வெளியீடு


3 Roses S2 Teaser: 3 Roses are back
x

கிரண் கே கரவல்லா இந்த வெப் தொடரை இயக்கி இருக்கிறார்.

சென்னை,

ஈஷா ரெப்பா, பாயல் ராஜ்புட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த வெப் தொடர் "3 ரோஸஸ்", ஆஹா ஓடிடி தளத்தில் இது சூப்பர்ஹிட்டானது. இப்போது, இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகி இருக்கிறது.

இதில் ஈஷா ரெப்பா, குஷிதா கல்லாபு மற்றும் ராஷி சிங் ஆகியோர் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நேற்று இந்த தொடரின் டீசர் வெளியானது.

இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ரவி நம்பூரி மற்றும் சந்தீப் பொல்லா எழுதியுள்ளனர், கிரண் கே கரவல்லா இந்த தொடரை இயக்கி இருக்கிறார். 3 ரோஸஸ் சீசன் 2 டிசம்பர் 12 முதல் ஆஹா ஓடிடியில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.

1 More update

Next Story