'ரூ. 1,000 கோடி செலவு செய்தாலும் 'மெய்யழகன்'போல படம் வராது' - பிரபல நடிகர்


You can spend 1000s of crores, but meiyazhagan is magical & classic - nani
x
தினத்தந்தி 26 April 2025 12:07 PM IST (Updated: 26 April 2025 12:08 PM IST)
t-max-icont-min-icon

ஹிட் 3 படத்தின் புரமோசன் பணி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

நானியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் திரில்லர் படமான ஹிட் 3 வருகிற 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், சாண்டல்வுட் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சைலேஷ் கோலானு இயக்கி இருக்கும் இப்படத்தின் புரமோசன் பணி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நானி,

"தமிழ் சினிமா என்பதை மறந்துவிடுங்கள். கடந்த பத்தாண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று 'மெய்யழகன்'. ரூ.1,000 கோடி செலவு செய்து படம் எடுக்கலாம். ஆனால் 'மெய்யழகன்' மிகவும் ஸ்பெஷல். அந்தப் படத்தில் ஏதோ மேஜிக் உள்ளது.

படத்தை பார்த்தபின் நான் கார்த்தியிடமும் பேசினேன். மெய்யழகனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நான் மகிழ்ச்சியாக உணர்வேன்' என்றார்

1 More update

Next Story