சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்


சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 23 May 2025 4:06 PM IST (Updated: 23 May 2025 4:57 PM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கி சூடு தாக்குதலும் நடைபெற்றது. இதையடுத்து, சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இதனிடையே, பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் கடந்த 20ம் தேதி அதிகாலை இளம்பெண் அத்துமீறி நுழைய முயன்றார். இதையடுத்து, அத்துமீறி நுழைய முயன்ற இஷா சாம்ரா என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இஷா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இஷா சாம்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இஷா சாம்ராவிடம் மும்பை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story