சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தது ஏன்? - சிம்ரன் விளக்கம்


சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தது ஏன்? - சிம்ரன் விளக்கம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 April 2025 8:55 PM IST (Updated: 28 April 2025 9:20 AM IST)
t-max-icont-min-icon

ஆக்சன் வேடங்களில் நடிக்க விரும்புவதாக சிம்ரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த சிம்ரன், தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது சசிகுமாருடன் அவர் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தது ஏன்? என்பது குறித்து சிம்ரன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, "நல்ல குடும்ப கதையாக இருப்பதால் 'டூரிஸ்ட் பேமிலி' படத்துக்கு உடனடியாக ஓ.கே. சொன்னேன். இன்னொரு காரணம், சசிகுமார். அவர் ஒரு மிகப்பெரிய டைரக்டர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமைதான்.

சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் கூடாது. திறமைக்கு முதலிடம். அந்த வகையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பதை எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். இனி அடுத்தடுத்து குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதேபோல ஆக்சன் வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்.

தற்போது லண்டனில் எனது மூத்த மகன் படிப்பு சம்பந்தமாக அவருக்கு உதவியாக இருக்கிறேன். விரைவில் இந்தியா திரும்புவேன். அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்துகொள்வேன்" என்று குறிப்பிட்டார்.

1 More update

Next Story