முனீஷ்காந்துக்கு ஜோடியாக நடித்தது ஏன்?- நடிகை விஜயலட்சுமி விளக்கம்

முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படம் வருகிற 21ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
‘சூது கவ்வும்', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜிகர்தண்டா', ‘டார்லிங்-2', ‘மாநகரம்', ‘டிடி ரிட்டன்ஸ்', ‘கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது 'மிடில் கிளாஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தினை தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் முனீஷ்காந்த் மனைவியாக விஜயலட்சுமி நடித்துள்ளார்.
‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் வருகிற 21ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரபல கதாநாயகியான விஜயலட்சுமி நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்துடன் ஜோடியாக நடித்தது எப்படி? என்று கேட்ட போது அவர் “நான் எப்போதும் படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து படத்தில் நடிப்பதில்லை. கதையை பார்த்துதான் படத்தில் நடிப்பதற்கு சம்மதிப்பேன். கேரக்டர் சரியாக இருந்து கதை சரியில்லை எனில் மொத்த படமும் வீணாக போய்விடும். அதுபோல் படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்ன போது நான் எதிர்பார்த்த கதை அமைந்திருந்தது. எனவே படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன்” என கூறினார்.
முனீஷ்காந்த் கூறும் போது, “படத்தில் எனக்கு ஜோடி விஜயலட்சுமி என்று டைரக்டர் கூறியதும், 'எப்படி சமமதித்தார்' என அவரிடம் கேட்டேன். 'கதையை கேட்டு சம்மதித்தார்” என கூறினார். அதுபோல் படத்தின் கதைக்கேற்ப கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் விஜயலட்சுமி. இவ்வாறு முனீஷ்காந்த் கூறினார்.






