"கராவளி" படத்தின் கதாநாயகி யார்?...கவனம் ஈர்த்த புதிய போஸ்டர்

இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
பிரஜ்வல் தேவராஜ் இப்போது இயக்குனர் குருதத்தா கனிகா இயக்கும் ’கராவளி’யில் நடித்து வருகிறார். கர்நாடகாவின் கடலோர பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படத்தில் ராஜ் பி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மித்ரா, ரமேஷ் இந்திரா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சச்சின் பஸ்ரூர் இசையமைக்கிறார். அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
வி.கே. பிலிம் அசோசியேஷன் மற்றும் கனிகா பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார் என்பதை யூகிக்கும் வகையில் புதிய போஸ்ட்ரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது நடிகை சம்பதா ஹுலிவானா என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது. விரைவில் கதாநாயகியின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






