சில்க் ஸ்மிதா மரணத்துக்கு காரணம் என்ன?.. நடிகர் ஆனந்தராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்

புகழின் உச்சத்தில் இருந்து சில்க் ஸ்மிதா 1996-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை,
வசீகரிக்கும் அழகாலும், கிறங்கடிக்கும் நடனத்தாலும் தென்னிந்திய சினிமாவையே கட்டிப்போட்டு வைத்தவர் சில்க் ஸ்மிதா. ‘திராவிட பேரழகி' என்று புகழப்பட்ட சில்க் ஸ்மிதா, தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது ‘கால்ஷீட்'டுக்காகவே படப்பிடிப்புகளை தள்ளி வைத்து காத்துக் கொண்டிருந்த காலம் உண்டு. புகழின் உச்சத்தில் இருந்து சில்க் ஸ்மிதா 1996-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையில் சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘‘சில்க் ஸ்மிதா எனக்கு நல்ல தோழி. என்னுடன் பல படங்கள் நடித்துள்ளார். அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு எனக்கும், அவருக்கும் ஒரு குத்துப்பாட்டு காட்சி கூட படமாக்கப்பட்டது.
ஆனால் மறுநாள் அவர் இறந்துவிட்டார் என்றதும் அதிர்ந்து போனேன். அவரின் இந்த முடிவுக்கு காரணம் மன அழுத்தம்தான். மனவலி அவருக்கு அதிகம் இருந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால் இப்போது வரை நடித்துக்கொண்டிருப்பார்'', என்றார்.






