‘துபாய், அமெரிக்காவில் இருப்பது நமது நாட்டில் இல்லை...’ - கீர்த்தி சுரேஷ் வேதனை

துபாய் உள்ளிட்ட நாடுகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்கள் இருப்பதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குநர் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் வரும் 28-ந்தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்பட நிகழ்ச்சியின்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
“பொதுவாகவே நமது நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகத்தான் உள்ளது. துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதுபோல் நமது நாட்டில் இல்லை. துபாய் உள்ளிட்ட நாடுகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் குறைபாடு இருக்கிறது. அது நிச்சயம் மாற வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






