காக்கிச்சட்டை அணிவது உணர்வுப்பூர்வமானது - ஆரி

சினிமாவில் காக்கிச்சட்டையை முதன்முறையாக அணிந்து 'கோலிசோடா 3' படத்தில் நடிக்கிறேன் என்று நடிகர் ஆரி கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். 'நெடுஞ்சாலை', 'தரணி', 'மாயா', 'உன்னோடு கா', 'முப்பரிமாணம்', 'நாகேஷ் திரையரங்கம்', 'நெஞ்சுக்கு நீதி', 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கோலிசோடா 3' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் சுனில், ராஜ் தருண், பரத் உள்ளிட்டோரும் நடிக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கும் ஆரி கூறும்போது, 'சினிமாவில் காக்கிச்சட்டையை முதன்முறையாக அணிந்து நடிக்கிறேன். இது உணர்வுப்பூர்வமான அனுபவத்தை தருகிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்துள்ளேன். உயர் போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து பேசி அறிவுரைகள் கேட்டு, மனரீதியாகவும் கதாபாத்திரத்துக்காக தயாராகி வருகிறேன். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை சமூகத்தில் விதைக்கும். ரசிகர்களை ஈர்க்கும் படமாக இது அமையும்" என்றார்.