விக்ரமின் "வீர தீர சூரன் 2" ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு


விக்ரமின்  வீர தீர சூரன் 2 ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 18 April 2025 2:35 PM IST (Updated: 18 April 2025 5:49 PM IST)
t-max-icont-min-icon

விக்ரமின் 'வீர தீர சூரன் 2' அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது

சென்னை,

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம்'வீர தீர சூரன் 2'. எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் விக்ரம் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ம் தேதி வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.இப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் 'வீர தீர சூரன் 2' படம் வரும் 24ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டியில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story