விக்ரம் பிரபுவின் “சிறை” படத்தின் 3-வது பாடல் நாளை வெளியீடு


விக்ரம் பிரபுவின் “சிறை” படத்தின் 3-வது பாடல் நாளை வெளியீடு
x

விக்ரம் பிரபு, அனந்தா நடித்துள்ள ‘சிறை’ படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகிறது.

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த ‘டாணாக்காரன்’ படத்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சிறை’ என்ற பெயரில் எழுதிய கதையே தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்‌ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார்.வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் 3-வது பாடலான ‘நீலோத்தி’ நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

1 More update

Next Story