’மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்...அவர்கள்தான் எனக்கு பக்கபலமாக இருந்தனர்’ - விஜய் வர்மா

சமீபத்திய நேர்காணலில், விஜய் வர்மா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்
சென்னை,
பாலிவுட் நடிகர் விஜய் வர்மா சமீபத்தில் நடிகை தமன்னாவை காதலித்து செய்திகளில் இடம்பிடித்தார். ஆனால், திடீரென பிரிந்ததாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இருவரும் தற்போது படங்களில் பிஸியாகிவிட்டனர்.
சமீபத்திய நேர்காணலில், விஜய் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். நடிகை ரியா சக்ரவர்த்தியின் பாட்காஸ்டில் பேசிய அவர்,
'நான் மும்பையில் உள்ள எனது குடியிருப்பில் தனியாக வசிக்கிறேன். அங்குள்ள மொட்டை மாடியில் வானத்தைப் பார்த்துக்கொண்டே என் நேரத்தை கழிப்பேன். அறையைவிட்டு வெளியவே வரமாட்டேன். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்.
அந்த நேரத்தில் அமீர் கானின் மகள் இரா கானும் நடிகர் குல்ஷன் தேவையாவும் எனக்குப் பக்கபலமாக இருந்தனர். தஹாத்தொடரின் படப்பிடிப்பின்போது நாங்கள் மூவரும் நண்பர்களானோம்’ என்று கூறினார்.
விஜய் வர்மா கடைசியாக ஐசி ரா4 தி காந்தமார் ஹைஜாக் என்ற வெப் தொடரிலும், மர்டர் முபாரக் , குல்தார் இஷ்க் என்ற படங்களிலும் நடித்திருந்தார்.






