"ஆல் பாஸ்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி


ஆல் பாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
x

பேமிலி சென்டிமென்ட் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பற்றி பேசுகிறது.

சென்னை,

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா தயாரித்துள்ள படம் ஆல் பாஸ். இந்த படத்தில் நடிகர் துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, இயக்குனர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்கிவருகிறார். பேமிலி சென்டிமென்ட் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பற்றி பேசுகிறது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.

1 More update

Next Story