நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி


Vijay pays tribute to actor Manojs body
x
தினத்தந்தி 26 March 2025 10:37 AM IST (Updated: 26 March 2025 12:14 PM IST)
t-max-icont-min-icon

மனோஜின் மறைவு திரைவட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதி ராஜாவின் மகன் மனோஜ் . இவர் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து மனோஜ் "சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரைவட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று தற்போது அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story