சூர்யா படத்தில் இணையும் சூரி பட நடிகை?

தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சென்னை,
சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ''கருப்பு''. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ''லக்கி பாஸ்கர்'' இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், இந்த நட்சத்திரங்களுடன் நடிகை பவானி ஸ்ரீ இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் சூரியின் ''விடுதலை'' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story